Wednesday, November 11, 2009

எந்த கடையில நீ அரிசி வாங்குற - தலை தெறிக்க ஓட வைப்பவர்கள்..

அட பி.டி மாஸ்டர்களை சொல்லைங்க.. குண்டா இருக்கவங்களை தேடி ஒரு குரூப்-பா அலையறாங்க சிலர்.. அவங்களை பத்தி தான் இந்த பதிவு..

என்னோட வருமான வரி தொடர்பா அப்பா வக்கீலை சந்திக்க சொன்னார். அவர் என்னை பார்த்ததும் முகம் மலர்ந்தார். ஒரே வரவேற்பு. கிளம்பும் போது திவ்யா உன்னோட ஹெல்த் பத்தி நிறைய பேசணும். சாயங்காலம் வீட்டுக்கு வரேன் – னு சொன்னார். என்னடா னு நான் முழித்து கொண்டிருக்க.. அவரே சொன்னார்.. நானும் 90 கிலோக்கு மேல இருந்தேன். இப்போ குறைஞ்சுட்டேன். அதான். அதற்கு மேல எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு வரேன் பேசிப்போம் என்று சொல்லி விட்டார்.

அப்பாவிடம் சொன்னேன். இது வரை ஐந்து வருடங்களுக்கு மேல் இவர் தான் வக்கீல். வேலை தொடர்பாக கூட அவர் வீட்டுக்கு வந்ததில்லையே என்று குழம்பினார். பிறகு சாயங்காலத்திற்கு நாங்கள் காத்திருந்தோம். அவர் மனைவியோடு வந்திருந்தார். அவர்கள் இருவரும் மற்றவர்களை விட என்னைப் பார்த்து தான் அதிகம் புன்னகைத்தார்கள். கையில் ஒரு பை.

பதிவு செய்த ரிக்கார்ட் போல, தன் உரையை ஆரம்பித்தார். தான் குண்டாக இருந்தது பற்றியும், தனக்கு வரப்பிரசாதமாக கிடைத்த ஒரு உணவையும் குறிப்பிட்டார். Positrim என்ற அந்த மருந்தை உணவிற்கு பதிலாக சாப்பிட வேண்டும் என்றும், அது சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம், இஷ்டம் போல சாப்பிடலாம். மாதம் ஒரு 12000 செலவு ஆகும் அவ்வளவு தான் என்று ஒரு போடாக போட்டார். செலவு பத்தி கடைசியாக சொன்னார். அதுக்கு முன்னாடி – சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்கு பின் என்று எடுத்திருந்த பல போட்டோக்களை காண்பித்தார். அது மட்டுமல்ல, வேலூரிலேயே இதை உபயோகிக்கும் மற்றவர்களை பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.

நல்லா தெரிந்தவராச்சே என்று எதுவும் சொல்லாமல் இருந்தோம். பிறகு, பொண்ண பாத்துட்டு மாப்பிள்ளை வீட்டில சொல்ற மாதிரி, “நாங்க யோசிச்சு சொல்றோம்” என்று சொல்லி விட்டோம்.

பிறகு அப்பா – வேற மருத்துவம் இப்போதைக்கு யோசிச்சிட்டு இருக்கோம். அப்புறமா வாய்ப்பு இருந்தா யோசிக்கறோம்.. என்று முடித்து விட்டார்.

இவரைப் போல எத்தனையோ பேர். பின் தொடர்ந்து வருவதுண்டு. இலவச ஆலோசனைன்னு சொல்லி சீட்டு தருவாங்க. ரொம்ப நல்லவங்க மாதிரி.. தாங்க எதுவுமே எதிர்ப்பாக்காம இந்த சேவை செய்யற மாதிரி இருக்கும். அவங்களோட ஒரே நோக்கம் நம்மளோட அலைபேசி நம்பர் தான். இலவச ஆலோசனைன்னு சொல்லி வாங்கிட வேண்டியது. அப்புறம் வீட்டுக்கே வந்து தரோம்ன்னு வந்து, சிறப்பாக ஒப்பித்து பலரையும் இந்த வலையில் மயக்கி தங்கள் பணியை சிறப்பாக செய்வதுண்டு.

இந்த டிராகுலா மாதிரி, ஒருவர் கடித்து, அவரும் டிராகுலாவாக மாறுவது போல, இந்த மார்க்கெட்டிங்கிலும், கஸ்டமரே அடுத்த கஸ்டமரை பிடிக்க ஆரம்பிப்பதுண்டு.

அண்ணாமலையிலும் ஆறுமுகத்திலும் தான் ஒரே பாட்டுல பணக்காரங்க ஆக முடியும். காலங்காலமாக சாப்பிட்டும் சோம்பேறியாகவும் இருந்த தொப்பையை வெறும் மருந்து வச்சோ மாத்திரை வெச்சோ கரைச்சிட முடியாது. மாதத்திற்கு நான்கு கிலோக்கு மேல் குறைத்தால் அது நல்லதல்ல.

அமேரிக்காவில் இது போல மருந்து மாத்திரைகள் பிரபலம். HerbalLife, Positrim,vlcc , La Belle, இன்னும் எத்தனையோ.. இவங்களோட பிழைப்பே குண்டா இருக்கவங்களை நம்பி தான்.

ஒரு தடவை உணர்ச்சி வேகத்துல நானும் அம்மாவும் VLCC போயிட்டோம். இது நடந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னமும் அழைத்து, புது ப்ளான் இருக்கு. 1 கிலோ குறைக்க 2 ஆயிரம் ரூபாய் தான். உங்களுக்காக தனியா போட்டு இருக்கோம். ஒரே வாரம் தான் இந்த ஆபர்.

இவங்க கிட்ட கேர்புல்லா டீல் பண்ணனும்..

ட்ரெயின் ல தோன்றிய ஒரு சின்ன தத்துவம்.. 5 ரூபாய்க்கு வாங்கின நாலு சமோசா போதும் 1 கிலோ எடை கூட்ட, ஆனால் ஒரு வாரம் தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே அதை மீண்டும் கரைக்க முடியும். சமோசா-வா சாதனையா.. நம் கையில் தான் நம் உடல்நலம்..

பி.கு – அண்ணாமலையும் ஆறுமுகமும் ஒரே கதை தானே என்று யோசித்தவர்கள், இன்னும் உடல் எடையைப்பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.