ஒரு பெண்ணைப்பற்றி 1200 எழுத்துக்களில் சொல்லி விட முடியுமா என்ன.. ம்ம்..
எனது மிகப்பெரிய பலம் எனது குடும்பம். அதிகமா இல்லாமல் இருப்பினும் எப்போதும் தோள் கொடுக்கும் நண்பர்கள் இருப்பதும் பெருமையாக இருக்கிறது.
நண்பர்கள் பிடிக்கும், உரையாடுவது பிடிக்கும்,கவலைகள் இன்றி குழந்தையைப்போல விளையாடுவது பிடிக்கும், குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும் அலாதியாக பிடிக்கும். கற்பனை செய்துக்கொண்டே இருப்பது பிடிக்கும், கிடைக்காது என தெரிந்திருந்தும் ஆசை வைப்பது பிடிக்கும். அலங்காரம் இல்லாமல் எளிமையாக இருப்பது பிடிக்கும்.
புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். பள்ளித்தோழர்கள் போல எப்போதாவது தான் அதனோடு நேரம் செலவழிக்கிறேன். முடிந்த வரை என்னை சுற்றி புன்னகையை பரப்ப விருப்புகிறேன். நான் எனது எல்லைக்கோடுகளை அறிந்த ஒரு சுதந்திர பறவையாக இருக்கிறேன். அப்படியே இருக்கவும் விரும்புகிறேன். எனக்கு வாய்த்த குடும்பத்தை பற்றி அடிக்கடி நான் அங்கலாய்ப்பதில் ஆர்வம் காட்டுகிறேன். மொக்கைகளும் மரண மொக்கைகளும் போட மாட்டேன் இது வரை ஆயிரம் சத்தியம் செய்தும் அதை மீறிக்கொண்டே இருக்கிறேன்.
குழந்தை வளர்ப்பு, கல்வி இதில் ஆர்வம் அதிகமாக இருப்பதால் என் சமுதாயப்பணியும் இதை சார்ந்தே இருக்கிறது. தினம் தினம் காலத்தின் மாற்றத்தை ரசித்து கொண்டு என்னையே நான் தேடிக்கொண்டே என் வாழ்க்கையைத் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.