பாலசந்தர் சார் இந்த வாக்கியத்தின் விளைவுகளை தெரிந்து டூயட் படத்தில் போட்டாரா தெரியவில்லை.. எல்லா குண்டு நண்பர்களும் நித்தம் நித்தம் சந்திக்கும் கேலிகளில் இது முக்கிய பங்கு வகிக்கும்.
உடல் கொஞ்சம் பருமனாக இருக்கும் எங்களுக்கு (என்னையும் சேர்த்து) அவர்களை ஒரு தனி பிரணியாகவே பார்க்கிறது இந்த சமுதாயம்.. என்னமோ நாங்கள் எல்லாம் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் போல வீசப்படும் கேலிகளும், அறிவுரைகளும் ஏராளம்..
எங்களை வைத்து செய்யப்படும் கேலிகள்
எந்த கடையில் நீ அரிசி வாங்குற..
உலகமே அதிரிது டா சாமி..
பெண்ணாக இருந்தால் – பிந்து கோஷ்
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கப்பலே கவுந்திடும்டா டே
எங்களுக்காக கொடுக்கப்படும் அறிவுரைகள்
இந்த அறிவுரை இருக்கே .. அது தாங்க உலகத்திலேயே எளிமையா கிடைக்க கூடியது..
அதுவும் குண்டா இருந்துட்டா ஒரே அறிவுரை மழை தான் போங்க.. இதற்கு டாக்டர்-க்கு படித்து இருக்கனும்னு அவசியமே இல்லை.. சில நொடிகளிலே பல டிப்ஸ் தயார் ..
அதில் சில..
1) சாப்பாடு கம்மி பண்ணிக்கோ
2) பழம் அதிகம் சாப்பிடு
3) நீ எதாச்சும் எக்சர்சைஸ்(உடற்பயிற்சி) செய்றியா
4) உடம்பு குறைக்கறது ரொம்ப சுலபம்.. நீ முதல்ல மனசு வைக்கணும்..
5) எண்ணையில் பொரிச்சது அதிகமா சாப்பிடாதே..
6) தினமும் வாக்கிங் போகனும்
இன்னும் சொல்லிட்டே போகலாம்..
எங்களை நிராகரித்த / வருத்தமடைய செய்யும் சில தருணங்கள்
1) துணிக்கடைகளில் அளவு கிடைக்காத போது
2) ஷேர் ஆட்டோவில் சில பணத்தாசை பிடித்த அண்ணாக்கள் ஏற்றாத போது
3) பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் வேறு இடம் காலியானவுடன் அங்கே சென்று அமரும் போது
4) சில சமயம் நாம் செல்லும் பேருந்து டயர் பஞ்சர் ஆகும் போது நம் மீது வீசப்படும் ஏளனப்பார்வைகள்
5) ரோட்டில் நடந்து செல்கையில் ஒருவர் இன்னொருவர் காதில் கிசுகிசுக்க, அது நம்மை கிண்டல் தான் செய்கிறார்கள் என்று வருத்தமடையும் சமயம்
6) படகு அல்லது உல்லாச சவார் செய்யும் போது உடல் எடையால் அது நிராகரிக்கும் சமயம்..
இதெல்லாம் ஆயிரத்தில் சில உதாரணங்களே..
உடல் உபாதைகளை விட பருமணாக இருப்பவர்களை அதிகம் பாதிப்பது இந்த சமுதாயம் அவர்களுக்கு தரும் அங்கீகாரமும் அவமானங்களுமே..
சினிமாக்காரர்களுக்கு நன்றி.. ஏற்கனவே கிண்டல் செய்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத்திற்கு இன்னும் எடுத்து கொடுப்பது போல் அமைந்து இருக்கும் சில கீழ் தரமான ஜோக்குகள் ஒட்டு மொத்த நண்பர்களையும் பாதிக்கிறது குறிப்பாக பெண்களை..
அமேரிக்கா நாட்டில் அதிகமாக சம்பாதிக்கும் ஒரு துறை – உடல் குறைப்பதற்காக இயங்கி கொண்டிருக்கும் துறை. இதில், உடல் இளைக்க அறிவுரை கூறும் வலைதளங்கள், சாப்பாட்டில் எந்த கட்டுபாடும் இல்லாமல் சில உணவு பொருட்கள் மூலம் உடல் எடைக் குறைப்போம் என்று மார்தட்டும் சில நிறுவனங்கள், ஒரே வாரத்தில் 10 கிலோ குறைக்கலாம்.. கவலைய விடுங்க என் கிட்ட வாங்க என்று கூவி கூவி அழைக்கும் சில ஜிம்-களும் அடங்கும்..
இப்படி குண்டா இருக்கவங்களுக்காக எத்தனையோ பேர் குரல் குடுத்து இருக்காங்க.. ஆனா எங்களைப்போன்ற நண்பர்களின் உணர்வுகள் அத்தனை பதியவில்லை இந்த சமுதாயத்தில்..
பொதுவாக ஒருவர் குருடராகவோ காது கேளாமல் இருந்தாலோ அவரை கேலி செய்து மகிழ்பவர் மிகவும் குறைவே.. அந்த அளவிற்கு நமது சமுதாயம் முன்னேறியுள்ளது நன்றே .. ஆனால் இதில் உடல் பருமணாக இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு.. நண்பர்கள் முதல், ஆசிரியர்கள், தெருவில் போகும் நாதாரிகள், பேருந்தில் போகும் பயணிகள், சின்ன சின்ன குழந்தைகள் – இப்படி எல்லோரின் கேலிக்கும் ஆளாகப்படுவது என்னை போன்ற குண்டு நண்பர்கள் தான்..
நான் மட்டுமல்லாது என் போன்றோரின் பலரது உணர்வுகளை பதிக்கவே இந்த தொடர் ஆரம்பிக்கிறேன்..
ஏதோ ஒரு வேகத்தில் எழுதும் தொடரில்லை இது.. பல நாட்கள் யோசித்து அரங்கேறிய வார்த்தைகளே இவை
இந்த தொடரில் என்ன என்ன எழுதினால் நன்றாக இருக்கும், இது போல உங்களுக்கும் ஏதாவது கருத்துக்கள் தோன்றுமாயினும், இந்த தொடரைப்பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமாகவோ அல்லது எனக்கு மின்னஞ்ஞல் மூலமாகவோ அனுப்பலாம்..
வெறும் உணர்வுகளின் வெளிப்பாடாய் இல்லாமல், பல தகவல்களையும் தரலாம் என யோசித்துள்ளேன்..
நிச்சயம் தொடரும்..
Wednesday, July 15, 2009
Subscribe to:
Posts (Atom)